ஈரோடு, டிச. 13 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வட்டார அளவில் பிரசார இயக்கம் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு காலவரையற்ற வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . இதன் படி ஈரோடு காளை மாடு சிலை அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மனோகரன் சரவணன் வீரா கார்த்திக் மதியழகன் ஆறுமுகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் காந்தி ராஜன் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.



