மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு கட்டிடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மதுரை கோட்டம் தலைமை பொறியாளர் செல்வராஜ் தலைமையிலும், கண்காணிப்பு
பொறியாளர் அய்யாச்சாமி மற்றும் துணை கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பு மதிமணி ஆகியோர் முன்னிலையிலும், சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டு செங்கரும்பு கட்டி பொங்கல் வைத்து எல்லோருக்கும் இனிப்புடன் உணவு வழங்கி ஒருவர்கொருவர் பொங்கல் வாழ்த்து கூறிசிறப்பாக கொண்டாடினார்கள்.