மார்த்தாண்டம், பிப்- 26
மார்த்தாண்டம் அருகே பரக் குன்று பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விஜின் (21) அந்த பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் பிஇ படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்லாதுரை மகன் மிமில் குமார் (32). மீன் வியாபாரி. விஜினும் மிமில்குமாரும் உறவினர்கள் . ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை விஜின் அந்த பகுதியில் நடந்து சென்ற போது அங்கு வந்த மிமில் குமார் வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த மிமில்குமார் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் விஜினை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தவரை கொலை மிரட்டல் விடுத்து, மிமில்குமார் தப்பி ஓடி விட்டார்.
விஜின் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.