கீரிப்பாறை நவ 29
கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில்கூட தொழிலாளர்கள் இ எஸ் ஐ மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் கூடத்தில் பணி புரியும் தொழிலாளிகள் 25-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டு வரும் அரசு ரப்பர் கழக தொழில்கூட தொழிலாளிகளைை நிர்வாக தரப்பிலோ, மாவட்ட நிர்வாகம் தரப்பிலோ அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு.
இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு திட்டமான தொழிலாளர் காப்பீடு திட்டமான இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அரசு ரப்பர் கழகத்தில் பணி புரியும் தொழிலாளிகளுக்கு வழங்கிட கேட்டு நீண்ட நாள் கோரிக்கையாக வைத்த பிறகும் தொழிலாளிகள் நலனில் அக்கறை காட்டாமல், இ எஸ் ஐ எனும் மருத்துவ திட்டத்தை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் அரசு ரப்பர் கழக அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி 25-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம், அதனை தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தினந்தோறும் இரண்டு பேர் வீதம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டமானது நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டமாக நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலோ, அரசு ரப்பர் கழக நிர்வாகம் தரப்பிலோ இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதை பார்க்கும் போது தொழிலாளிகள் நிர்வாகத்தால் தொடர்ந்து நசுக்கப்படுவதாகவே தெரிகிறது. எனவே எங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்தி தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். சாதாரணமாக அரசு தொழிலாளிகளுக்காக வழங்கி வரும் அடிப்படை தேவையான இ எஸ் ஐ மருத்துவ காப்பீட்டை அரசு ரப்பர் கழகத்தில் பணி புரியும் தொழிலாளிகளுக்கு மட்டும் வழங்க மறுக்கும் காரணம் மர்மமாக உள்ளது.
தொழிலாளிகளை பாதுகாக்க வேண்டிய அரசு தற்போது உண்ணாவிரதம் இருந்து போராடிவரும் தொழிலாளிகளை பாதுகாக்க தவறியதாகவே தோன்றுகிறது. நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த தியாகிகளை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.தங்கள் உயிர் தியாகத்துடன் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இனி ஒரு போராட்டம் இது போல் நடைபெறாமல் அரசு போராடுபவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே உயிர் தியாகம் நீர்த்துள்ளனர். தற்போது அரசு ரப்பர் கழக தொழில் கூட தொழிலாளிகளின் போராட்டமானது தீவிரமடைந்து வருகிறது. அதிதீவிரமாக சென்று கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளிகளுக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பாதிக்கப்படுவது அந்த தொழிலாளியின் குடும்பம் என்பதை நிர்வாகமும் அரசும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஆகவே தொழிலாளிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூட தொழிலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீவிரமடைந்து வரும் தொழிலாளர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து போராடும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.