தேனி மாவட்டம், செப் – 7 தேனி மாவட்டம்,உத்தமபாளையம்
நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல் திறன் மற்றும் மேம்பாடு சட்டம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில்
சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலும் சிறுபான்மையினருக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழி செய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் வக்பு திருத்த சட்டம் அரசியல் அமைப்புப் பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 30க்கு எதிராக உள்ளது இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் நிலவியது மேலும் எதிர்க்கட்சி எம்.பிகள் இதனை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கடுமையாக குற்றம் சாடினார்
ஆனால் இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது இதன் இரண்டாவது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி டெல்லியில் நடந்து முடிந்ததை அடுத்து
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், அமைப்புகள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்
வக்பு திருந்த சட்டத்தை எதிர்த்து தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மின்னஞ்சல் அனுப்பட்டு வருகிறது. உத்தமபாளையத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர்
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி நகர தமுமுக செயலாளர் தாவீத் ஒலி நகர பொருளாளர் முகமது ஆசிப், கிளைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் மின்னஞ்சல் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்