சென்னை, அக்டோபர் – 24 , தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.
499/- விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 10 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை திட்டத்தினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை கோபாலபுரம் நகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை தென்மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாட்டில் விவசாய பெருமக்களின் நலனை காத்திடவும், பொது வினியோக திட்டப் பொருட்களை கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலை கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தினை செயல்படுத்திடவும் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டை கடந்து இந்தியாவிற்கே முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.
“தரமான பொருள் நியாயமான விலை” என்ற கோட்பாட்டுடன் இயக்கப்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் முதற்கட்டமாக கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரிலும் நவீன மயமாக்கப்பட்டது.
மேலும் தற்போது பெரியார்நகர், அடையாறு, கலைஞர் கருணாநிதி நகர், சூளைமேடு, நந்தனம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, 9 வது மண்டல குழுத் தலைவர் எஸ் .மதன் மோகன், 111 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.ஆ. நந்தினி,
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் இயக்குனர் சு . பழனிச்சாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆ . அண்ணாதுரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் இயக்குனர் த. மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்