அரியலூர்,நவ;10
அரியலூர் மாவட்டத்திலுள்ள 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025- ஐ தகுதி நாளாகக் கொண்டு; 18-வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள எதிர்வரும் 28.11.2024 வரை விண்ணப்பங்கள் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறை நாட்களான 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேற்படி முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 06.01.2025 அன்று வெளியிடப்படும்.
01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்