மதுரை மாவட்டம்
திருமங்கலம் அருகே போல்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதி என்பதால் அரசு துவக்கப் பள்ளியில் கல்வி பயில்வதற்காக பள்ளிக் குழந்தைகள் உட்காருவதற்காக சேர் நாற்காலிகள் இல்லாமல் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்துள்ளனர். இது தொடர்பாக கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் லிமிடெட் என்ற தனியார் அமைப்பின் சார்பில் மேலாளர் நேரில் வருகை புரிந்தார் அவருக்கு பள்ளிக் குழந்தைகள் சிறப்பான வரவேற்பளித்தனர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் நடன நாட்டியங்கள்
தமிழ் பண்பாட்டு பாரம்பரிய சிலம்பாட்டம்
நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர் கிரிடெட் அக்ஸஸ் கிராமீன் லிமிடெட் சார்பில் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள் மேஜைகள் புத்தக ரேக்குகள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் வட்டார கல்வி அலுவலர் செல்வி முன்னிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியின் போது தலைமையாசிரியர் ரோஜா மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசஆஞ்சிநேய ரெட்டி பிரிவு மேலாளர் ஜான்பீட்டர் ஏரியா மேலாளர் பொன்ராஜ் திட்டமிடல் கண்காணிப்பு குழு அசோக் ராம்குமார், உள்பட ஆசிரியைகள் இளைஞர் அணி பள்ளி மேலாண்மை குழுவினர் உடனிருந்தனர்.