புதுக்கடை, டிச – 8
புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதி வெள்ளங்கட்டி விளையை சேர்ந்தவர் மரிய செல்வம் மகன் றோபின் (28). இவர் டெம்போ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதிகமாக கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டு மேல் மாடியில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு றோபின் தற்கொலை செய்தார். இது தொடர்பாக அவரது தாயார் ஜெயா என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்து, நேற்று (7-ம் தேதி) காலை வழக்கு பதிவு செய்தனர்.