குமரி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் ஆல் இந்திய போலிங்க் பூத் சார்பில் அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை தர நிர்ணயம் செய்ய மாவட்ட தர நிர்ணய ஆய்வகம் நாகர்கோயிலில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டாமல், இத் திட்டத்தில் மார்ச் 2025 ல் பொது சுகாதார துறையின் திருநெல்வேலி தலைமை நீர் பகுப்பாய்வாளர் பணியாளர்களை தேர்வு செய்து வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி அமர்த்தியுள்ளனர்.இவர்கள் கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்படும் குடி நீர் தர நிர்ணய பணிகளை செய்யாமல் இரத்த பரிசோதனை பணிகளை செய்ய பணிக்க பட்டுள்ளனர். TWAD board இத் திட்டத்தில் பொது சுகாதார துறை இயக்குனருக்கு கிராம ஊராட்சி களில் விநியோகிக்கப்படும் குடிநீரை தர நிர்ணயம் செய்யும் பணிகளுக்காக 2024-25 ம் ஆண்டு ரூ. 129 கோடி யை நிதியாக கொடுத்துள்ளது.ஆனால் மாவட்ட தர நிர்ணய நீர் பகுப்பாய்வாகங்களை கட்டாமலே அரசு மருத்துவ மனைகளில் செயல்படும் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் நீர் பரிசோதனை செய்ய பொது சுகாதார இயக்குனர் உத்தரவு இட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட நீர்பகுப்பாய்வகத்தை நாகர்கோயிலில் உடனே ஏற்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics