கிருஷ்ணகிரி, பிப்.23- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோச்சம்பள்ளி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற ராஜ சபா உறுப்பினர் டாக்டர் மு. தம்பிதுரை கலந்து கொண்டு மகாதேவா கொல்லஹள்ளி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாலாஜி நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வேடி இல்ல நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றி, புளியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முல்லை ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, விவசாயி மாவட்டத் துணைத் தலைவர் பைனான்ஸ் வேலு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், வேடி, ரகு, தங்கராஜ், பன்னிர், ரங்கநாதன், ராஜேந்திரன் உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



