வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இருபத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிப்பாதை கேட்டும், பள்ளி மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல் தடுப்பதால் கல்வி பாதிப்பு என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்
வாணியம்பாடி: நவ:26, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் இருவதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முனீஸ்வரன் கோயில் கட்டிய நிலையில் கோயில் நிர்வாகிகள் இந்த 20 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கோயில் வழியாக வரும் பொது வழியில் அனுமதிக்காமல் நீங்கள் ஏற்கனவே எப்படி வரப்பு வலிகளை பயன்படுத்தினீர்களோ அதே வலியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வழியில் வராதீர்கள் என்று தடுத்து நிறுத்தியதால் சுமார் ஒரு வார காலமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதியுற்று வந்ததால் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்தில் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: பல ஆண்டுகளாக இருபதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் இந்த பொது வலியினை பயன்படுத்தி வந்துள்ளதாகவும், தற்போது கோயில் கட்டிய பகுதியில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து இந்த வழியில் நீங்கள் செல்லக்கூடாது இனிமேல் இதற்கு முன்பு எந்த வழியில் சென்றீர்களோ அதே வழியில் பயன்படுத்துங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுகிறார்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் மாலைக்குள் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து தகவல் கூறுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் மனு வழங்க வரும்போது பள்ளி சீருடையிலேயே பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளதை அறிந்து, மாணவ மாணவிகளின் பெற்றோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அழைத்து ஏன் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே அழைத்து வந்தீர்கள் நீங்கள் சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நடவடிக்கை எடுக்க மாட்டேனா? முதலில் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கடிந்து கொண்டார். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், பள்ளியின் தலைமை ஆசிரியரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார். மனு அளிக்கும்போது விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ், மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பொதுமக்கள் இருந்தனர்.