தருமபுரி ஏப்.22
தருமபுரி நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் .கே. பி. ஜே. தங்கமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர கழக அவைத் தலைவர் அலகுவேல் தலைமை தாங்கினார். நகர கழக துணைச் செயலாளர் முல்லைவேந்தன் வரவேற்புரை யற்றினார். அன்பழகன், சம்மந்தம், சுருளி ராஜன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ.மணி எம் பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி , மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பேசினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் நாட்டான் மாது நன்றி கூறினார்.