தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தமிழகத்தில் இந்தி திணைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் அசோக்குமார் வரவேற்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், இன்பசேகரன், நகர செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இக்கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மணி, தலைமை கழக பேச்சாளர்கள் சூர்யா, கிருஷ்ணமூர்த்தி, பெர்த்தி வினித் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் முன்னாள் எம்பிக்கள் எம் ஜி சேகர், தாமரைச்செல்வன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞரணி மத்திய அரசை கண்டித்து கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics