அஞ்சுகிராமம் மே – 14
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் புதியதாக
தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஒன்றிய இளைஞரணி, பேரூர் இளைஞரணி நிர்வாகிகள்
மருங்கூர்வேப்பமூடுசந்திப்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ்
தலைமையில் ஒன்றிய செயலாளர் வக்கீல் |மதியழகன் அவர்களுக்கு மலர் கீரிடம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.
உடன் பேரூர்செயலாளர்கள் இளங்கோ, மகேஷ், மயிலாடி டாக்டர் சுதாகர் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் காந்தி ராஜ், வாத்தியார் செல்வக்குமார்,கழகநிர்வாகிகள் பலர்நிகழ்வில் கலந்து கொண்டனர்.