சிவகங்கை:பிப்:10
சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசுமுறைப்பயணமாக இரண்டு நாட்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைதந்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கழக நிர்வாகிகளை காரைக்குடி தனியார் மண்டபத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாவட்ட, ஒன்றிய , நகர , பேரூர்க்கழக செயலாளர்கள், தலைமைப்பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை சந்தித்தர்.
முதலமைச்சர் நிகழ்ச்சியின் இறுதியில் சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் அவர்களை அழைத்து கழகப்பணிகளை செவ்வனே நடத்திவரும் ஜெயராமனுக்கு அனைவரும் எழுந்து கரவொலி எழுப்புங்கள் எனக்கூறி வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தார்.
இதனை சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள் பாராட்டி கொண்டாடும் வகையில் பாராட்டு விழா நடத்தினர்.
சிவகங்கை தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் கொட்டகுடி பஞ்சவர்ணம் வரவேற்புரையாற்றி பேசினார். நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
அதில் ஒன்றிய பொருளாளர் அரசு ஒப்பந்ததாரர் உசிலம்பட்டி பாண்டியராஜா, மாவட்ட திமுக பிரதிநிதி தியாகராஜன், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் சிங்கமுத்து, செம்பூர் ஆறுமுகம், தொமுச செம்பூர் காட்டுராஜா, மானாகுடி அய்யப்பன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின்
இறுதியில் ஏற்புரையாற்றிய ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் பேசும்போது அடுத்த மாதம் வருகின்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்ததினத்தை ஒன்றிய பகுதிகள் முழுவதும் கழக இருவண்ணக்கொடியேற்றியும் பொதுமக்கள் நலத்திட்டங்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடவேண்டும், மேலும் கழகத்தலைமை அறிவிக்கும் எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் தெற்கு ஒன்றியக்கழகத்தின் சார்பில் சிறப்பாக நடத்தி முடித்திடுவோம் எனவும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களுக்கும்,என்னை பாராட்டிய கழகத்தலைவர் தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் , கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
இதனிடையே முன்னதாக ஒன்றியக்கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டமானது ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக, சார்பு அணி நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.