அஞ்சுகிராமம் பிப்-25
ஒன்றிய பாஜகஅரசு மும்மொழி கல்வி திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் எப்படியாவது இந்தியை. திணித்துவிட முயற்சி எடுத்துவருகிறது. மும்மொழி கல்வி திட்டத்தை தமிழக அரசு ஏற்காத காரணத்தினால் நிதி ஒதுக்காமல் உள்ளது.- மேலும் மும்மொழி கல்வி. திட்டத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய இயலும் என ஒன்றிய அமைச்சர் கூறினார். இதனையடுத்து தமிழகத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்தி மொழி திணிப்பை எதிர்க்கும் விதமாக
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அறிவுரையின்படி
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமையில்
மருங்கூர் பேரூர் செயலாளர் மகேஷ் முன்னிலையில் மருங்கூர் பேரூராட்சி ஆத்தியடி, டாக்டர் சுதாகர் தலைமையில் மயிலாடி, அஞ்சு கிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் தலைமையில் ஸ்ரீ லெட்சுமிபுரம் கிராமங்களில் வீட்டு வாசல்களில் இந்தி திணிப்பை எதிர்ப்போம்.என கோலமிட்டும், ஒன்றிய அரசே
இந்தி திணிப்பை நிறுத்து என தட்டிபோர்டுகளை வீட்டுவாசல்களில் கூட்டியுள்ளனர்.
இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் பேசும் பொழுது திமுகவோ, தலைவர்களோ, இந்தி மொழி படிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் மும்மொழி கல்வி திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் நிதி தர முடியும் என்பது இந்தி மொழியை மறைமுகமாக தினிக்கும் முயற்சி. தமிழக முதல்வர் எத்தனை கோடி தந்தாலும் தமிழகத்தின் இருமொழி கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கையில் கையெழுத்து போடமாட்டேன் என உறுதி அளித்திருப்பது தமிழ்மொழி பேசும் அனைவருக்கும் ஆறுதல் தந்துள்ளது. மேலும் இந்தி மொழியை திணிக்க முயற்ச்சித்தால் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை விட்டு ஒட ஒட விரட்டப்படும் என்றார்