சிவகங்கை ஜூலை -28
சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் மாவட்ட திமுக சார்பில்
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில்
சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது
மாநிலங்களவை உறுப்பினரும் திமுக அயலகச் செயலாளருமான எம்.எம் . அப்துல்லா பேசுகையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை மட்டும் பாரபட்சமாக நடத்தி வருகிறது. தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி. வரியை பெறும் மத்திய அரசானது தமிழகத்தின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது கண்டனத்திற்குரியது. என்று பேசினார்.
இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் தென்னவன் சிவகங்கை நகரச் செயலாளரும் நகராட்சித் தலைவருமாகிய சி.எம்.துரை ஆனந்த் திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமுத்து சேங்கைமாறன் இளைஞர் அணி செயலாளர் அயூப்கான் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.