சிவகங்கை: மார்ச்:24
சிவகங்கை மாவட்டக்கழக திமுக செயலாளர் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னாள் அமைச்சர் முகவை மு. தென்னவன், மற்றும் கழக சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் ஆகியோரது வழிகாட்டலின் பேரிலும்
திருக்கோட்டியூர் கருவேல்குறிச்சி கிராமத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ். எஸ். ஏ. வல்லபாய் அவர்கள் மரக்கன்றுகளை நட்டுவித்தார்.
திருக்கோட்டியூர் திமுக கிளைக்கழக செயலாளர்கள் சக்கரவர்த்தி, வடிவேல், பாண்டி, மாதவன், அம்பலகாரர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் மாணிக்கம்,
முன்னாள் ஆசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களது ஆணையை ஏற்று 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதாகவும் ஒரு லட்சம் என்ற இலக்கை மாற்றி இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மரக்கன்றுகள் தேவைப்படுவோர் தங்களை நாடலாம் எனவும் மாவட்ட அமைப்பாளர் எஸ். எஸ். ஏ. வல்லபாய் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலைமணி , பிரதிநிதி வெள்ளைச்சாமி, தன்னார்வலர் முத்துச்செல்வம் , வசந்த், உள்ளிட்ட கிராம இளைஞர்கள், மகளிர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சிறப்பாக செய்திருந்தார்.