தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் முதல் விற்பனையை மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி லதா பெற்றுக் கொண்டார் பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகிறது இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள் காஞ்சிபுரம் ,ஆரணி ,தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் திருப்புவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள் , படுக்கை விரிப்புகள்,தலையணை உறைகள்,வேட்டி,லுங்கி, துண்டு இரகங்கள், பருத்திச் சட்டைகள், திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந் நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் இராஜேஷ்குமார் ,சேமிப்பு கிடங்கு மேலாளர் ராமச்சந்திரன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் அருள் செல்வி ஏற்பாடு செய்திருந்தார்.