கன்னியாகுமரி அக் 30
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை, தீபாவளி பரிசுகளை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் ஆலோசனைப்படி மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.இசக்கிமுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கே.சாந்தி, மகாராஜபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுயம்பு, அனீஸ்வரி, ராஜம், ஊராட்சி செயலர் சிவசங்கரி, ஊராட்சி பணியாளர் இஷா ப்ரியதர்ஷினி மற்றும் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் சொர்ணவதி, பகவதியம்மை, சரஸ்வதி, கிருஷ்ணம்மாள், நாகலெட்சுமி, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்