கிருஷ்ணகிரி ஆக 12: கிருஷ்ணகிரி தனியார் அரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அசோசியேசன் (பேக்சியா) சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேக்சியா மாநில துணைத்தலைவர் கிருஷ்ணகிரி எஸ். முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கருணாகரன், ரகுநாதன், முருகேசன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் பேக்சியா நிறுவனத் தலைவர் என்.பாண்டுரங்கன் மாநிலத் தலைவர் சி. பழனிச்சாமி, மாநில பொதுச் செயலாளர் திருநாவு குமரேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஜி. அன்புக்கரசு,டி.சேகர், கே. செந்தில் முருகன், எ. வெங்கடாசலம், எ. தனுஸ்லாஸ், ஆர்.துரைசாமி, தேனி வி. பழனிச்சாமி, தஞ்சைமாதவன் மற்றும் இருநூற்றுக்கு மேற்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பதிவாளரின் ஊதிய உயர்வு குறித்த சுற்றறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையும் வரை சுற்றறிக்கையினை ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது. 1.கூட்டுறவு சங்க பணியாளர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும்.
2.சங்கங்களை ஏபிசி- என வகைப்படுத்தாமல் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அதன் பின்னரே செயல்பாட்டின் அடிப்படையில் கூடுதல் ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட வேண்டும் என பதினொரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இன்னும் பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
ஊதிய உயர்வு குறித்த மேற்கொண்ட குறைபாடுகளை நிறைவேற்றித்தராத பட்சத்தில் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் சேலம் நகரில் நடைபெறும் என பேக்சியா சங்கத்தின் பொதுச் செயலாளர் திருநாவுக் குமரேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.