இராமநாதபுரம் ஜூலை. 15:-
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம் பட்டினம்காத்தான் தனியார் மஹாலில் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் செந்தில் பொன்குமார் முன்னிலையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனர் கோவை ரங்கராஜ் மாநில தலைவர் சார்லஸ் மாநில பொருளாளர் ரவி ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்,
இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகி மணிகண்டன் தொகுப்புரை ஆற்றினார், இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தலைவராக நாகேந்திரன், மாவட்ட செயலாளராக ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளராக ராஜ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளராக முனியசாமி ஆகியோர்கள் புதிய நிர்வாகிகளாக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர், இதில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.