நீலகிரி ஏப்ரல் 13
நீலகிரி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் செயல்பாடு குறித்த நீலகிரி மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்றது். மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் தயாரிப்புகளை பிற மாவட்டங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார் மேலாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் ஊட்டியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசியதாவது. நீலகிரி மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் அதை சந்தைப்படுத்து விதம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் வருட வணிக செயல்பாடுகள் மற்றும் இந்த வருடத்திற்கான வணிகத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவன தயாரிப்பாளர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறையில் விற்பனை மையங்களில் வைத்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



