தஞ்சாவூர் மார்ச் 15.
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் நடந்த பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் கூட்டரங்கில் தொழிலி 5.0என்ற தலைப்பில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது
பெண்கள் தொழில் முனைவோராக உருவாகிட தகுந்த அனுபவங்களை வெற்றியாளர் களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் தேர்ந்தெடுக்கும் தொழில் மற்றும் உற்பத்தியிலும் விற்பனை செய்வதற்கான உத்தியைகளை பயிற்சி மூலமாக பெற்று சிறந்த தொழில் முனை வோராக உயர வேண்டும்.
சிறிய முதலீட்டின் மூலம், தரமான பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு தொடர்பாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .மகளிர் சுய உதவிக் குழுவின் உற்பத்தி பொருள்கள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்றார்
நிகழ்ச்சியில் நிறுவன இயக்குனர் பழனிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.