நிலக்கோட்டை, டிச. 9 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் இளங்கோவன் தலைமையில், இபில்லிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். தலைவர் சிவபிரகாஷ், பொருளாலர் செல்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் கணேசன் வரவேற்றார்.
போராட்டத்தின்போது நிலக்கோட்டை தாலுகாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், நிதி ஒதுக்கியும் தாமதமாகும் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கி செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தியும், அனுபவமில்லா ஊழியர்களால் பல்வேறு குளருபடிகளை ஏற்படுத்தியுள்ள இ-பில்லிங் முறையை ரத்து செய்யவும், சமீப காலமாக வழக்கறிஞர் தாக்கப்பட்டு வருவதை தடுக்கும் வகையில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் உதவி பொருளாலர் தமிழ்செல்வி, உதவி தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



