தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலைவர் மனோகரன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் மணி, மாநில நிர்வாகிகள் கீரை விஸ்வநாதன், சூடப்பட்டி சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் முருகன், கிருஷ்ணகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், நகரச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கட்சித் தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 72- வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்படுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் சார்புஅணி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



