தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்திற்கு முன்பு மைதானம் உள்ளது. இதன் படி அனுதினமும் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த கோவில் வளாகத்திற்கு உள்ளே சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி பகல் நேரங்களில் வெறுச்சோடி இருப்பதால் அந்நிய நபர்கள், மற்றும் கேரள மாநில நபர்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு பஸ் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கார் பார்க்கிங் ஆக பயன்படுத்தும் இந்த கோட்டை மைதானத்தை இதனை துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணித்து வெளி நபர்கள் யாரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லக்கூடாது என அறிவுறுத்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


