மதுரை பிப்ரவரி 12,
மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
இத்திருக்கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 5:30 மணி முதல் சாமி தரிசனம் ஆரம்பித்து கோவில் நிர்வாகம் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக கூடுதலாக நேரம் ஒதுக்கியது. இதனால். அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கூட்டம் காணப்படுவதால் மதியம் 2.30 மணி வரை 9 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து பால்குடம் மற்றும் காவடி, சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. விழாவிற்கு வருகை புரிந்த பக்தகோடி பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது. காவல் துறையும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.