கிருஷ்ணகிரி,ஜன.30- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் காசிக்கு நிகரான பழமை வாய்ந்த சிவாஆலயம் அருள்மிகு வேதநாயகி உடன்மர் ஸ்ரீபென்னேஸ்வரர் சிவாஆலயம் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் கிரிவலம் நடைபெறு வருகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே மழையை குடைந்து கிரிவலம் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பழமை வாய்ந்த சிவாஆலயம் மற்றும் மகாவிஷ்ணு பெருமாள் ஆலயமும் ஆறு மற்றும் மலை இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. பிரதி மாதந்தோறும் பக்தர்கள் படைசூழ பல்லக்கில் உற்சவ மூர்த்தியுடன் நடைபெறும்.கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவனருள் பெற்றனர்.ஆடி அமாவாசை அன்று ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் தென்பெண்ணை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தால், இதில் துன்பங்கள் விலகி, இன்பங்கள் பெருகி எப்பேற்பட்ட சாபங்களும் தோஷகளும் விலகும். இதன் தொடர்ச்சியாக பெண்ணேஸ்வரமடத்தில் உள்ள சிவஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து ஊர் கவுண்டர் சின்னசாமி கூறியதாவது: வருகின்ற பெண் பக்தர்களுக்கு உடை மாற்றுவதற்கு அறையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவலம் சுற்றும் பக்தர்களுக்கு ஏதுவாக ஏழு மணி முதல் இரவு 9 மணி வரை தெய்வீக கலை நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. என்று கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.