சிவகங்கை: மார்ச்:29
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சியில்
கடந்த 4 ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்களின்
கீழ் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 87 வளர்ச்சிப் பணிகள் ரூ.14.32கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2024-25) நெற்குப்பை பேரூராட்சி பகுதிகளில்
ரூ.391.78 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 27 வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், ஆய்வு மேற்கொண்டு தகவல்.
சிவகங்கை நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்,ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமன்றி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திடும் பொருட்டு, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அப்பணிகள் தொடர்பான கள
ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2024-2025 நடப்பாண்டில் மொத்தம் 27 வளர்ச்சிப் பணிகள் ரூ.391.78 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
அதனடிப்படையில், மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.54.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் செட்டியூரணி மேம்பாட்டு பணிகள், 15 வது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வட்டார நல வாழ்வு மைய கூடுதல் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள், 6-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.97.00 இலட்சம் மதிப்பீட்டில் சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் ,
கட்டப்பட்டு வரும் 06 கூடுதல் புதிய வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள், கவனம் சார்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் பணி,
தமிழ்நாடு நகர்ப்புற
வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊரணி வரத்து வாய்க்கால் தூர்வாருதல், ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து தரமான முறையில்
முடிக்கப்பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, 2021-2022 ஆம் நிதியாண்டில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 26 பணிகள் ரூ.488.87 இலட்சம் மதிப்பீட்டிலும், 2022-2023 ஆம் நிதியாண்டில் மொத்தம் 14 பணிகள் ரூ.295.99 இலட்சம் மதிப்பீட்டிலும். 2023-2024 ஆம் நிதியாண்டில் மொத்தம் 20 பணிகள் ரூ.255.20 இலட்சம் மதிப்பீட்டிலும் என கடந்த கடந்த நான்காண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 87 வளர்ச்சிப் பணிகள் ரூ.14.32 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்று, மாவட்டம் முழுவதும் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையாக அனைத்து அடிப்படை வசதிகளும், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, தேவகோட்டை உதவி ஆட்சியர் (பொ) ரெங்கநாதன் நெற்குப்பை பேரூராட்சி தலைவர் பழனியப்பன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் கண்ணன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசம், பேரூராட்சி செயல் அலுவலர் பசலிக்கா ஜான்சி, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.