சங்கரன்கோவில். செப்.24.
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட இளைஞரணி சார்பில் சிதம்பராபுரம் கிளை கழகத்தில் உள்ள சம்பாகுளம் கிராமத்தில் கலைஞர் நூலகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார்,
திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி பி ராஜா , குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன் வரவேற்றார். இதில்
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு நூலகத்தை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் சரவணன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராயல்கார்த்தி, ராஜ், அன்சாரி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரபுரம் கிளைச் செயலாளர் சண்முகராஜ் நன்றி கூறினார்.