தென்காசி மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
5 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற ஊராட்சி மன்ற தலைவர் பதவியை அனுமதிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேற எந்த எல்லைக்கும் செல்வோம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முடிவு .
தென்காசி, நெல்லை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலானது கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் இதுவரை 3 ஆண்டு காலம் பதவி வகித்து வந்துள்ளனர் இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு இந்த வருடத்துடன் ஐந்தாண்டு கால பதவி காலம் முடிவடைய உள்ளது இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்களை 5 ஆண்டுகள் முழுமையாக மக்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கூறியும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் ஐந்து ஆண்டு பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைப்பதை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி. கே. பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிவ ஆனந்த், வேலுச்சாமி ,சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர் அன்பு ராணி, மாவட்ட செயலாளர் பூமிநாத், மாவட்ட பொதுச்செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் முயற்சி செய்த நிலையில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது காவல் துறையினருக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க தடுப்பது ஏன் எனக்கூறி பிரச்சனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 7 ஊராட்சி மன்ற தலைவர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காவல் துறையினர் அனுமதித்த நிலையில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் கூறியதாவது :
ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றுவோம் என்று கூறி வாக்கு சேகரித்த நிலையில் தற்போது மூன்று ஆண்டுகளோடு பதவி முடிவடையபோகிறது என்று கூறுவது கண்டனத்துக்குறியது. எனவே ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், பஸ் மறியல் போன்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என்றும் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 185 ஊராட்சி மன்ற தலைவர்களும் 200-க்கும் மேற்பட்ட துணைத்தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்