திருப்பத்தூர்:மார்ச்:5, திருப்பத்தூர் மாவட்ட இரயில்வே கிளை சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது திருப்பத்தூர் கிளை தலைவர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.
சேலம் கோட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசை கண்டித்து ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தின்போது
பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 8 வது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்திடவும், இரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியும், உண்மையான விலைவாசி உயர்வுக்கேற்ப DA- வழங்க வேண்டும். விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் கேட்டுள்ள தொழிலாளர்களுக்கு இடமாற்ற உத்தரவை வழங்க வேண்டும் என ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில் இரயில்வே கிளை செயலாளர் ரவி, துணை செயலாளர் அறிவானந்தம், கதிர்வேல், சங்கர், மதிவாணன் மற்றும் இரயில்வே துறையின் கீழ் பல்வேறு கிளைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று 50 கற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.