நாகர்கோவில் ஜூலை 7
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்ப்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது . அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் படத்திற்க்குகு வீரவணக்கமும், மரியாதையும் செலுத்தப்பட்டது. இதில் இக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இச்சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.