நாகர்கோவில் பிப் 24
ஒன்றிய அரசின் ஹிந்தி,சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பாக குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.முசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர்கழக செயலாளர்
கோ.வெற்றி வேந்தன்
தொடக்கவுரையாற்றினர். திமுக ஒன்றிய செயலாளர் ஆ. லிவிங்ஸ்டன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெ.சி. நவீன்குமார், வாக்குசாவடி பிரிவு மாநில தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன், மாவட்ட ம.திமுக செயலாளர் எஸ். வெற்றிவேல், வி.சிக மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மேனாள் செயலாளர் இசக்கிமுத்து, திராவிட நட்புக்கழக மாவட்ட பொறுப்பாளர் செ. விஷ்னு திகமாவட்ட காப்பாளர் ம.தயாளன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர் மாவட்ட திக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், திக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் துணைச் செயலாளர்கள் சி.அய்சக் நியூட்டன், எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திக இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், திராவிடர்கழக மாநகர தலைவர்ச.ச. கருணாநிதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் இரா.இராஜேஷ் ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், திக பகுதி தலைவர்கள் ச.ச.மணிமேகலை, பி.கென்னடி, தி.ஞானவேல் திராவிட கழக தோழர்கள் கலைச்செல்வன், சுபன், பெனடிக், இரா. முகிலன்
மற்றும் தோழர்கள் தோழமை இயக்கத்தினர். பெருந்திரளாக பங்கேற்றனர். இறுதியாக ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம், இனமொழிப் பண்பாட்டைக் காப்போம், மொழி உரிமை காக்க எழுவீர், என
போராட்ட முழக்கமிடப்பட்டது.