திண்டுக்கலில் மாநகர திமுக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
திண்டுக்கல்லில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார்
உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திமுகவை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் பிலால் உசேன் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார்,ஆனந்த், பஜ்ஜுலுஹக்,
சந்திரசேகர்,மற்றும் மாவட்டம் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.