தென்காசி மாவட்டம்
உடல் உழைப்பு தரக்கூடிய சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும் உலக சாதனை நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி எ குட்டியப்பா பேச்சு
சாலை பாதுகாப்பு மற்றும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி இரண்டரை மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் இலஞ்சி குருகுலம் சித்திரை சிலம்பம் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தென்காசி தனியார் பள்ளியில் 2 மணி நேரம் 30 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முனைவர் சிவ ஆனந்த் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் கதிர்வேல், சமூக செயல்பாட்டாளர் மணிமாறன், இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா, ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் அப்துல் மஜீத், திரில் பார்க் நிறுவனர் ஏகே சுந்தர், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, குருகுலம் சித்திரை சிலம்பம் நிறுவனர் சங்கர், குருகுலம் சுரேஷ் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். நிகழ்ச்சி முடிவில் வாகன போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இரண்டரை மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளிடம் பேசிய அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பேசியதாவது தற்போதைய காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது குறைந்துவிட்டது. விஞ்ஞான உலகத்தில் மாணவர்கள் மத்தியில் விளையாட்டுகளில் கூட உடல் உழைப்பு இல்லாத செஸ், கேரம்போர்டு போன்ற விளையாட்டுகள் அதிகரித்துள்ளது. நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் உடல் உழைப்புகள் அதிகம் இருந்த காரணத்தினால் 100 வயது கடந்தும் வாழ்ந்து உள்ளனர். நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளில் மாணவ மாணவிகள் ஈடுபடுவது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. உடல் உழைப்புகளை தரக்கூடிய சிலம்பு போன்ற பயிற்சிகளில் மாணவ மாணவிகள் ஈடுபட வேண்டும். வருகின்ற காலத்திலும் இது போன்று அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்கள் கூறி பேசினார். இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பொண்னாடை அணிவித்தும் கேடயங்கள் வழங்கியும் அனைவரையும் பாராட்டி பேசினார்
இந்நிகழ்ச்சியினை குருகுலம் சித்திரை சிலம்பம் பயிற்சியாளர்கள் சிவ கிருஷ்ணன், திருவாளர் சித்து, பேச்சிமுத்து ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.