ஊட்டி.டிசம்.05.
பெஞ்ஜல் புயல் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலுவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது இந்த புயல் தமிழகத்தை நெருங்கி வந்து நேற்று முன்தினம் முதல் இரவு வரை கரையைக் கடந்த போது 70, 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது இந்த புயலின் தாக்கம் நீலகிரியிலும் காணப்பட்டது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. பெஞ்ஜல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை மேகமூட்டத்துடன் அதிகமான குளிர் காற்றுடன் வீசுவதால் கடும் குளிர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கன மழையால் இரண்டு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலையில் கொப்புள நோய் ஏற்பட்டு விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயம் செய்த காய்கறி பயிர்கள் நீர் தேங்கி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில் தற்போது பெஞ்ஜல் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி கிடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் மற்றும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரவு பகலாக தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. பகல் நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து இருளாகவே காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களை இயக்குவோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாரு செல்கின்றனர். மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நிலவும் அதிகப்படியான குளிர்தன்மையால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சாலை ஓரங்களில் சிறிய சிறிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி 24.மணிநேர பேரிடர் மீட்பு உதவிகள், பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். பொதுமக்களும் பாகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.