திருப்பூர் ஜூன்:24
சிவசேனாUBT கட்சி மாநில தலைவர் ரவிச்சந்திரன் ஜி மற்றும் மாநில பொதுச் செயலாளர்
தா. சுந்தரவடிவேலன் ஜி ஆகியோரின் அறிவுரையின்படி சிவசேனா UBT கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் K.G. சக்திவேலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜூலை 26 ஆம் தேதி வாழும் சத்திரபதி மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஜி பிறந்த நாளை திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது மற்றும் மாவட்டத்தில் கொடி கம்பம் அமைப்பது பற்றியும் இக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வினோத் குமார் தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம் தெற்கு மாநகரச் செயலாளர் கணேஷ் மற்றும்100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.