குச்சனூர் அக் 10:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியின் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் பி. டி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் துணைத் தலைவர் மணிகண்டன் இளநிலை உதவியாளர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் முன்னதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் பணி சிறக்க வேண்டி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குச்சனூர் பேருராட்சிக்குட்பட்ட துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்குவது பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் அவசர கூட்டத்தில் அனைத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் போஜராஜன் தயாளன் பிரசாந்த் முத்துராமலிங்கம் லீலாவதி நாகராணி பந்தானம் மீனாட்சி சித்ரா பிரேமா உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளவரசு நன்றி கூறினார்.