திருப்பூர் அக்:7
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் 1-வது வட்டக் கழக ஏற்பாட்டில், குமரன் காலனி முத்தாலம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச இருதய பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை, ரத்த தான முகாமினை திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ துவக்கி வைத்தார்.
இந்நிகழச்சியில் மாநகர செயலாளர்கள், மேயர் ந.தினேஷ்குமார், டி.கே.டி மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் கொ.ராமதாஸ், வெ.ஜோதி, மு.க.உசேன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் உமா மகேஸ்வரி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டக் கழக செயலாளர்கள் ச.மகேந்திரன், நந்தகோபால், மூர்த்தி, வர்த்தகர் அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, மாமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பிரேமலதா கோட்டா பாலு, லோகநாயகி கருப்பசாமி, பத்மாவதி, மாநகர துணை செயலாளர் ராமசாமி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், அருண், உதயா, ராஜீவ், அருண்ஜீவா, கோபால், ஆனந்த், நவீன், சாதிக், சங்கர், வேலுச்சாமி, கார்த்தி, தமிழ், பரமேஸ்வரி, மகளிர் அணி நிர்வாகிகள், கௌரி, ஷோபனா, சரண்யா, சௌமியா, பானு, கோகிலவாணி மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



