இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி வள்ளி மாடன்வலசையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் ரூ.6.25 கோடி மதிப்பில் பெரியார் சமத்துவபுரம் கட்டுமான பணி பூமி பூஜை விழா நடந்தது. இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பூமி பூஜையில் செங்கல் வைத்து துவக்கி வைத்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் திருப்பதி ராஜன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத் தலைவர் புல்லாணி, வட்டார வளர்ச்சி ஆணையர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி தலைவர் கோபி மற்றும் சமத்துவபுர பயனாளிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இங்கு 100 குடியிருப்புகளுடன்,விளையாட்டு திடம், சமுதாயக் கூடம், நூலகம், சிறார் பூங்கா, துணை மின் நிலையம், பொது கிணறு, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, பெரியார் உருவச்சிலை அமைய உள்ளன.



