செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் மத்திய அரசை கண்டித்து கட்டுமானம் மற்றும் ம னைத் தொழில் கூட்டமைப்பு சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 5% இருந்த கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்தும் கட்டுமான தொழிலுக்கான வரியை 18 விகிதம் வரை உயர்த்தியதை திரும்ப பெறக் கோரியும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில இணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்