தென்காசி மாவட்டத்தில் ரூ. 15.89 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
பின்னர் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்லைவர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்றைய தினம் மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.63.54 இலட்சம் மதிப்பிலும், சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.148.26 இலட்சம் மதிப்பிலும், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.105.9 இலட்சம் மதிப்பிலும், அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.127.08 இலட்சம் மதிப்பிலும், மடத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.169.44 இலட்சம் மதிப்பிலும், ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.84.72 இலட்சம் மதிப்பிலும், வேலாயுதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.42.36 இலட்சம் மதிப்பிலும், செங்கோட்டை ஸ்ரீராம மந்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளில் ரூ.169.44 இலட்சம் மதிப்பிலும், புளியரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.127.08 இலட்சம் மதிப்பிலும், தென்காசி இ.சி.ஈ அரசு மாதிரி பள்ளியில் ரூ.169.44 இலட்சம் மதிப்பிலும், சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.85.44 இலட்சம் மதிப்பிலும், சங்கரன்கோவில் கோமதி அம்பிகை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.63.54 இலட்சம் மதிப்பிலும், சிவகுருநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.232.98 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.15.89 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 13 பள்ளிக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.