கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், காரகுப்பம் பி.ஆர்.கல்யாண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர். உடன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆர்,ஜெயந்தி, பர்கூர் பேரூராட்சி தலைவர் .சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



