கன்னியாகுமரி டிச 6
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தென் தாமரைகுளம் பேரூர் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென் தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை சுதன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுக்கு ஒன்றிய பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் முகிலை பால்ராஜ், பாலன்,ரெத்தினராஜ், பூவை நடராஜன், செல்லநாடார், முத்துக்குமார், முகுந்தன்,சுந்தரலிங்கம், செந்தில், கே.டி.ராஜா,பால்துரை பலர் பங்கேற்றனர்.