அஞ்சுகிராமம் மே 1
அஞ்சு கிராமம் பேரூராட்சி 12வது பகுதியில் சங்கரலிங்கபுரம் ஊரும் அருகில் காலனியும் இருந்தது.. இந்நிலையில் தமிழக சட்ட சபையில் முதல்வர் .மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் காலனி என பெயர் அரசு குறிப்பேடில் இடம்பெறாது என அறிவித்தார் இதனையடுத்து அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் தலைமையில் பகுதி சபா உறுப்பினர் கணேசன், சந்திரா காந்தி, கீதா ஆகியோர் விளம்பர பலகையில் உள்ள காலனி பெயரை அழித்தனர்.
மேலும் காந்திராஜ் பேசும் பொழுது சமத்துவம் தழைக்க சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம். ஊர்களில் இருக்கும் காலனி எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது திராவிட மாடல் அரசு பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில் ஊர்களில் இருக்கும் காலனி எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் திராவிட_மாடல் அரசு.முதலமைச்சரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது. சமத்துவம் தழைக்க – சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம் என்றார்.