அஞ்சுகிராமம் நவ-17
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து அஞ்சு கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மயிலாடி புதூர் பஸ் ஸ்டாப்பில் ஆள்களை இறக்கிவிட நின்ற போது, பின்னால் வந்து கொன்டிருந்த தடம் எண்- 3 கண்ணன்குளம் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முன் இருக்கையில் இருந்த கல்லூரி மாணவி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறையான பயிற்சி இல்லாத
தற்காலிக ஓட்டுநர் நடத்துனர்களை வைத்து பேருந்து இயக்கும் நிர்வாகத்தால் தினம் விபத்துக்கள் அரங்கேறி வருகிறதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.