சிவகங்கை:மார்ச்:04
தமிழகம் முழுவதும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது . இதில் சிவகங்கை மாவட்டத்தில் 68 -அரசு பள்ளிகள் உள்பட 162 – மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் . இதில் 7234 -மாணவர்களும், 8829 – மாணவிகளும் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள் . இவர்களுக்காக மாவட்ட முழுவதும் 83 – தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன .இந்தத் தேர்வில் 174 – பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினார்கள் . 101- மாற்றுத் திறனாளிகளும் தேர்வு எழுதினார்கள். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தத்தில் 15,894 பேர் வருகை புரிந்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் .இந்த தேர்வுகளை முன்னிட்டு சிவகங்கை நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் நேரில் சென்று ஆய்வு செய்தார்.